‘நம்பர்–1’ நோக்கி இந்தியா | ஜனவரி 16, 2023
ஐதராபாத்: நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக வெல்லும் பட்சத்தில் இந்திய அணி, ஒருநாள் அரங்கில் ‘நம்பர்–1’ இடம் பிடிக்கலாம்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், ‘டி–20’ தொடரில் பங்கேற்க உள்ளது. முதலில் ஒருநாள் தொடர் நாளை ஐதராபாத்தில் துவங்கவுள்ளது. அடுத்த இரு போட்டிகள் ராய்ப்பூர் (ஜன. 21), இந்துாரில் (ஜன. 24) நடக்கும்.
இதற்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள், நேற்று ஐதராபாத் சென்று சேர்ந்தனர். இன்று இவர்கள் பயிற்சியை மேற்கொள்ள காத்திருக்கின்றனர். ரோகித், கோஹ்லி உள்ளிட்டோர் ஐதராபாத் விமான நிலையம் வந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
‘நம்பர்–1’ வாய்ப்பு
ஒருநாள் தரவரிசையில் தற்போது நியூசிலாந்து 115 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து (113), ஆஸ்திரேலியா (112) அணிகள் அடுத்த இரு இடங்களில் உள்ளன. இலங்கை தொடரை 3–0 என வென்ற இந்திய அணி 110 புள்ளிகளுடம் நான்காவதாக உள்ளது.
அடுத்து நியூசிலாந்து தொடரை 3–0 என முழுமையாக வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கு 4 புள்ளி கூடுதலாக கிடைக்கும். இந்தியாவுடன் தோற்றதால் நியூசிலாந்து அணியும் புள்ளிகளை இழக்கும். இதனால் இந்தியா 114 புள்ளி பெற்று உலகின் ‘நம்பர்–1’ அணியாக உயரலாம். இங்கிலாந்து (113), ஆஸ்திரேலியாவை (112) அடுத்து நியூசிலாந்து அணி 110 புள்ளியுடன் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
